முத்தமிழ் வித்தகருக்கு மலர்மாலை சூடி இருவாட்சி கவிதை நூல் வெளியீடு



உலகின் முதல் தமிழ் பேராசான் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து.....

கதிரவன் கலைக் கழகம் நடத்தும் கவிஞர் ரவி கிருஷ்ணாவின் இருவாட்சி கவிதை நூல் வெளியீட்டு விழா 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில்  மிகச் சிறப்பாக இடம் பெற்றது.


















மண்முனைப் பிரதேச சபை கௌரவ தவிசாளர் கா.செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இவ் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு இ.இளங்குமுதன் உதவிப் பிரதேச செயலாளர் - மண்முனைப்பற்று, திரு உ.சிவராசா-மாநகர ஆணையாளர்திருகோணமலை ஆகியோரும்  

கௌரவ விருந்தினர்களாக

திரு ச.தட்சணாமூர்த்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்-பட்டிருப்பு கல்லி வலயம், திரு கே.ஹரிசெல்வக்குமார் உதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம் கிழக்கு மாகாணம், திரு கி.மதிசுதன் - முகாமையாளர் ஆசிரிய வாண்மை விருத்தி மத்திய நிலையம் பட்டிருப்பு கல்வி வலயம், திரு க.கமலதாசன்

சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியற் கல்லூரி மட்டக்களப்பு, திரு ஆ.இராசன் -விரிவுரையாளர்கல்வியற் கல்லூரி பேராதனை, திரு க.தவச்சந்திரராசா விரிவுரையாளர் ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையம் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆகியோரும் 

விசேட விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார இணைப்பாளர் திரு கி. குணநாயகம், திரு ச.சின்னத்தம்பிப்போடி-ஓய்வு நிலை அதிபர், திரு சா.மதிசுதன் -ஓய்வுநிலை அதிபர்,திரு க.அரசரெத்தினம் -அதிபர் மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்திரு மு.குணேசலிங்கம்-அதிபர்மட்/மமே/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்திரு அ.குலேந்திரராசா-அதிபர்மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்திரு நா.இராமேஸ்வரன்-அதிபர்மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயம் திரு த.கணேசலிங்கம்-அதிபர்

மட்/மட்/கிரான்குளம் விஷ்னு வித்தியாலயம் திருமதி மலர்தேவி குருபரன் -ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ஆகியோரும் பங்குபற்றினர்.

























முதற் பிரதியினை வேல்முருகன் சகோதரர்கள் அண்ணாச்சி சண் சிவபாதசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொள்ள, நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் திரு க. மோகனதாசன் அவர்கள் நிகழ்த்தினார்.

வெளியீட்டு விழாவின் வரவேற்புரையினை கதிரவன் பட்டிமன்றப் பேரவைப் பொருளாளர் மட்டுநகர் சிவ வரதகரன் நிகழ்த்த, இருவாட்சி நூலின் வெளியீட்டுரையினை கதிரவன் பட்டிமன்றப் பேரவைச் செயலாளர் கவிஞர் அழகுதனு நிகழ்த்தினார். தொடர்ந்து கதிரவன் கலைக் கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் கதிரவன் த.இன்பராசாவின் தலைமையுரையும், கதிரவன் கலைக்கழகப் பொருளாளர் திரு சி. சுதேஸ்வரன் அவர்களின் நன்றியுரையும்

கதிரவன் கலைக் கழகச் செயலாளர் புதுவையூர் பு.தியாகதாஸ் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பும்  நிகழ்வை அலங்கரித்தன.

கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்வியலாளர்கள், சமூகப் பற்றாளர்கள் என பலரும் பங்கு பற்றிய இந்நிகழ்வின் நிறைவாக நூலாசிரியர் கவிஞர் ரவி கிருஷ்ணாவின் ஏற்புரை மிகச் சிறப்பாக அமைந்தது.

சமூகத்தில் நடக்கின்ற நல்லதைக் கண்டு பாராட்டுவதும், கெட்டவற்றைக் கண்டு மனம் கொந்தளிப்பதும் கலைஞர்களின் இயல்பு. இத்தகைய சூழலில் மனதில் தோன்றுகின்ற விடயங்களை ஒரு கலைஞன் எழுத்தாகவும், நடிப்பாகவும், ஓவியமாகவும் அல்லது தன்னிடம் இருக்கும் ஆளுமைக்கேற்ப ஏதோ ஒரு வகையில் கலை இலக்கிய வடிவமாக வெளிப்படுத்துவான்.

"இருவாட்சி" கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் ரவி கிருஷ்ணா தனது உள்ளக் கிடக்கைகளை கவிதைகளாக வெளிப்படுத்தி மன ஆறுதல் அடைந்துள்ளார் என்பதை இக்கவிதை நூலை வாசிக்கின்ற போது வெளிப்படையாகின்றது.

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியரான ரவி கிருஷ்ணா இருவாட்சி கவிதை நூலில் 67 கவிதைகளை விதைத்திருக்கின்றார். வாசகர்கள் இதனை வாசிக்கின்ற போதுதான் அவை விருட்சமாகும்.

இவருடைய கவிதைகள் சிறப்பானவைகள்  என்பதற்கு எடுத்துக்காட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமே இக்கவிதை நூலை வெளியிட்டு வைத்திருக்கின்றமையாகும்.








கதிரவன் த.இன்பராசா

தலைவர்

கதிரவன் கலைக் கழகம்