173 ஆவது சிறப்புப் பட்டிமன்றம்
ஈச்சந்தீவு அருள்மிகு கண்ணகையம்மன் திருச்சடங்கின் இரண்டாம் நாள் (25.05.2026) விளாவட்டுவான் கிராம மக்களின் பெருவிழாவில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 173 ஆவது சிறப்புப் பட்டிமன்றம் அரங்கேற்றம் காண உள்ளது.
தற்காலத்தில் பக்தி நெறியை மேலோங்கச் செய்வது ஆண்களா...? பெண்களா...? எனும் தலைப்பில் பட்டிமன்ற நடுவர், கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா அவர்களின் தலைமையில் ஆண்களே...! எனும் அணியின் சோலையூரான் ஆ.தனுஸ்கரன் ,கவிஞர் தங்க யுவன் ஆகியோரும், பெண்களே...! எனும் அணியில் பாலமீன்மடு இரா கலைவேந்தன் புதுவையூர் பு.தியாகதாஸ் ஆகியோரும் பங்கு பற்ற உள்ளனர்.
பட்டிமன்றத்தினை தொடர்ந்து கதிரவன் த. இன்பராசாவின் நெறியாள்கையில் நகைச்சுவை பூபாலனின் பங்குபற்றலோடு சிரிப்போடு சிந்தனை நகைச்சுவை நாடகம் நடைபெற உள்ளது. இந்நாடகத்தில் கவிஞர் தங்க யுவன், சோலையூரான் ஆ. தனுஸ்கரன் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

