பழைய மாணவர் சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு - 27.05.2026


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கில் மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடத்தும் தரம்-5 -2025 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி  பெற்ற, கா.பொ.த  (சா/த) பரீட்சையில் 9A பெற்று சித்தி பெற்ற, கல்வியற் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கானதும் மற்றும் இலங்கை நாடளாவிய சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர் களுக்குமான பாராட்டு நிகழ்வு 

ஆலய முன்றல் - புதுக்குடியிருப்பில்
27.05.2026 (புதன்கிழமை)  இரவு - 9.30 மணிக்கு கலிங்ககுடி மக்களின் திருச்சடங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு ஆன்மீக விருந்தினர் களாக புதுக்குடியிருப்புஅருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய பிரதமகுரு அ. இராமேஸ் வரன் அவர்களும், புதுக்குடியிருப்பு அருள்மிகு விக்னேஸ்வரர் ஆலய பிரதமகுரு  சிவ ஸ்ரீ அ. ஜனார்த்தன சர்மா அவர்களும் பங்குபற்ற நிகழ்வின் தலைமையினை
பழைய மாணவர் சங்கத் தலைவரும்,
மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபருமாகிய திரு அ. குலேந்திரராஜா அவர்கள் ஏற்க உள்ளார்.

முதன்மை விருந்தினராக மண்முனைப் பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு கி.இளம்குமுதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக 
கலாநிதி மேகராசா சிரேஷ்ட விரிவுரை யாளர் கிழக்குப் பல்கலைக்கழகம், திரு சி.சிவகுமார் இணைப்பாளர் (விசேட கல்வி)
வலயக் கல்வி அலுவலகம் மட்டக்களப்பு, திரு ஞா.கிருஷ்ணகுமார் விரிவுரையாளர் கல்வியற் கல்லூரி ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். 

கௌரவ விருந்தினர்களாக
புதுக்குடியிருப்பு ஆலயப் பரிபாலன சபையினர், மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், புதுக்குடியிருப்பு கல்வி அபிவிருத்தி சபையினர் பங்குபற்றும் இந்நிகழ்வில் 27 மாணவர்கள் கௌரவம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுந்தரராஜன் டிநோஷன்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்