கவிதைகளோடு பேசும்.....
கணதியான நிகழ்வொன்று
செவிகளிலே குளிரூட்டி.....
செய்தி சொல்ல வருகிறது.
கவிபாடும் கவிஞர்கள்....
கவிப் போக்கின் ஆய்வுகள்.
கவிஞர் கௌரவங்கள்....
கவியுலகின் புத்தகங்கள்.
ஓர் நிகழ்வு நான்காகி....
ஓர்மத்துடன் எழுகிறது.
ஊர்க்கவிகள் கூடுகின்ற....
ஒப்பற்ற நிகழ்வாகும்.
அசையாமல் இருப்பதினால்
அழிந்திடும் எதிர்காலம்
விசையோடு எழுந்திட....
விவேகம் புகழ்பாடும்.
ஆதலால் அனைவரும்
ஆங்காங்கே செயற்படுவோம்
காதாலால் நற்பணி...
காத்திடுவோம் வாருங்கள்.
கதிரவன் த.இன்பராசா
தலைவர்
கதிரவன் கலைக் கழகம்
06.05.2026


