இன்றைய தினம் கவிஞர் ரவிகிருஷ்ணா ஐயாவின் இருவாட்சி நூல் வெளியீடானது நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது அந்த வகையில் இன்றைய தினம் இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்த ஆசிரியர் ரவிகிருஷ்ணா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூல் வெளியீடானது 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை சரியாக பிற்பகல் 3.30 மணியளவில் கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வானது ஆரம்பமானது இந் நிகழ்வில் பிரதம அதிதிகள் , கௌரவ,சிறப்பு அதிதிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள், கலைஞர், கவிஞர்கள் , அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்
நிகழ்வின் முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் நடைபெற்றது தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் பாடப்பட்டது அதனைத் தொடர்ந்து கதிரவன் கீதம் இசைக்கப்பட்டது அதன் பின்னர் முதல் தமிழ் பேராசிரியரான விபுலானந்தர் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் வரவேற்புரையினை மட்டுநகர் சிவ வரதகரன் அண்ணா அவர்களால் ஆற்றப்பட்டது கதிரவன் இன்பராசா ஐயா தலமையுரையாற்றினார்
இன்பராசா ஐயா என் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர் அதுபோல் நானும் அவர் மீது அன்பு மதிப்பு வைத்துள்ளேன் அவரது பேச்சு ஆக்கபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் நகைச்சுவை மிகுந்ததாகவும் காணப்பட்டது அத்தோடு அவர் பேசும்போது ஓர் விடயத்தில் முக்கியமான நபர் என எனது பெயரை கூறியது எனக்கு அவர் என் மீது வைத்துள்ள அன்பினையும் மதிப்பினையும் சுட்டிக்காட்டியது உங்களுக்கு எனது அன்பான நன்றி ஐயா ❤️
நிகழ்வில் அடுத்ததாக வெளியீட்டு உரையினை அழகுதனு அவர்கள் ஆற்றினார் அவர் வெளியீட்டு உரையின் போது நூலாசிரியர் பற்றியும் நூல் பற்றியும் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினார் அவர் நூலாசிரியர் பற்றி கூறுகையில் நூலாசிரியர் சிறந்த ஒரு கல்விமான் எனவும் அத்தோடு இரண்டு முதுமாணிப் பட்டம் பெற்றவர் என தனது உரையில் கூறினார்
நூல் வெளியீடு செய்யப்பட்டது
நூல் வெளியீடு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாணம்
முதல் பிரதியினை வேல்முருகன் சகோதரர்கள் என குறிப்பிடப்படும் சிவபாதசுந்தரம் ஐயா பெற்றுக்கொண்டார் பின்னர் நூலின் முதல் தொகுதி வழங்கப்பட்டது இதில் எனக்கும் நூல் கையளிக்கப்பட்டது அடுத்து கவிஞர் ரவிகிருஷ்ணா ஐயாவின் மகளது மழலை மொழியில் அழகான ஒர் கவிதை கூறப்பட்டது அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நேரத்தில் சிறிய சிற்றுண்டியும் தரப்பட்டது நிகழ்வில் அடுத்து நூல் இரண்டாம் கட்டம் வழங்கப்பட்டது வருகை தந்த அனைத்து அதிதிகளுக்கும் நூல் வழங்கப்பட்டது
பின்னர் நூலின் நயவுரை
விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மோகனதாசன் ஐயா அவர்களினால் ஆற்றப்பட்டது அப்போது மண்டபத்தில் ஓர் குண்டூசி விழுந்தால் கூட விளங்கும் அளவில் அமைதி காணப்பட்டது காரணம் மோகனதாசன் ஐயாவின் பேச்சு அந்த பேச்சில் உள்ள விடயம், தமிழ் உச்சரிப்பு அவரது அந்த கம்பீர பேச்சு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வாறு நூலில் உள்ள விடயங்களை அனைத்தையும் தெளிவாக குறுகிய நேரத்தில் கூறி முடித்தார் இவர் பற்றி கூறுகையில் மரியாதைக்குரியவர் இவர் என்னை நேசிப்பவர் என் மீது அன்பும் மதிப்பும் கொண்ட ஒருவர் நானும் அப்படியே அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் அவர் மட்டும் அல்ல அவரது சகோதரரான கல்வியல் கல்லூரி ஆசிரியர் கமலதாசன் ஐயா அவரும் என் மீது அப்படியே நானும் அப்படியே என் மாணவன் என அவர் என்னைப் எப்போதும் கூறுவார் இன்றும் கூட இதனை அவர் கூறினார்
மேலும் இன்று எனக்கு உயர்தரத்தில் பாடசாலையில் தமிழ் பாடம் கற்பித்த ஆசிரியர் குணலெட்சுமி ஆசிரியர் நலம் விசாரித்து என்னை அவர் பக்கத்தில் உள்ள ஒருவரிடம் நான் கற்பித்த மாணவன் என கூறினார் இப்படி இன்றைய மூன்று மணித்தியாலங்கள் பெறுமதி கொண்ட நேரமாக இருந்தது தமிழ் என்ற கடலில் நான் மூழ்கி கிடந்தேன் தமிழ் என்ற கடல் என குறிப்பிட படுவது இன்று சந்தித்த விரிவுரையாளர்,ஆசிரியர்கள் அனைவரும் ஆகும்
நிகழ்வில் அடுத்ததாக கவிஞர் ரவிகிருஷ்ணா ஐயா அவர்களுக்கு கௌரவிப்பு நடைபெற்றது தொடர்ந்து சிறப்புரை, வாழ்த்துரை , முதன்மை விருந்தினர் உரை நடைபெற்றது ஏற்ப்புரையினை நூலாசிரியரும் ஆசிரியருமான கவிஞர் ரவிக்கிருஷ்ணா அவர்களால் ஆற்றப்பட்டது இதன் போது அவரது சிறு வயது கஸ்ட நிலை அவரது கல்வி வளர்ச்சி அவர் இந்த படைப்பு உருவாக்கத்தின் பின்னணி என அவரது உரையில் அமைந்து இருந்தது இதில் அவர் கூறிய போது இந்த படைப்பு 2003 ஆண்டு படைக்கப்பட்டது என கூறினார் இது இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளது என்றார் ஆசிரியர்
நான் பெருமை கொள்கிறேன் காரணம் அன்று (2003,2004) வெளியீடு நடைபெற்று இருந்தால் இந்த பொன்னான நிகழ்வை நான் பார்க்காமல் போய் இருக்கும் ஏன் என்றால் அப்போது எனக்கு வயது 4 வயதாக இருந்து இருக்கும் இப்போது நான் பெற்ற பாக்கியம் இது என நினைக்கிறேன் அவரது சிறுவயதின் கதை என்னை சோகத்தில் ஆழ்த்தியது ஆசிரியரின் முயற்சி இன்று அவரது வளர்ச்சியை காட்டி நிற்கிறது வாழ்த்த வயதிலை இருந்தும் எனது அன்பும் பணிவும் ஐயா ❤️
இறுதியில் நன்றியுரை
நிகழ்வு இனிதே நிறைபெற்றது
நூல் பற்றிய சில கருத்து
நூற்பெயர் இருவாட்சி பெயர்க்கும் ஏற்ற போல் உள்ளீடு காணப்பட்டது இந்த நூலில் அறுபத்து ஏழு (67) கவிதைகள் அடங்கியுள்ளது இந்த நூலானது கல்வி, அரசியல், இயற்கை, உறவு, வாழ்வியல், முதலான விடயம் பற்றி பேசுகிறது
உள்ளே.
மரம் என்பது வரம், வாசிப்பை நேசிப்போம் காகிதமும் பேனாவும் , புதிய பொங்கல், கடந்த சொர்க்கம், வைரமணி துளிகள், தீபாவளி ,பேரழகு , வாழும் தெய்வம் விவசாயி, மக்களின் சிரிப்பு , தங்கை, பயணம், ஆசிரியப் பெருந்தகையீர், அப்பா பாடல் , அண்ணன் , கடலோடு சில வினாடி, கிராம வீதிப்பயணம் ,கவர்மெண்ட் உத்தியோகம் ,வீடு , காலைப்பொழுது, அறியாமை விலகட்டும் , மருத்துவம், புலமைப் பரிசில், பணக்காரத் தனிமை, அம்மா ,அப்பா, தென்றலை எதிர்பார்த்து, மறவர், பெண்ணொன்று பிறந்து விட்டால் , கலங்காதே மனமே , நீண்ட தூர கடினம், விருட்சம், ஆகுதியானவர்கள், உழவனை மதிப்போம் உன்னதமாய் வாழ்வோம், காகிதங்கள், மழை, காலை போட்ட சட்டை, தோழமை ,குளிர் நடுக்கம், சூறாவளியே வர வேண்டாம் ,கவிஞர் வாழ்க கவிதை மலர்க , எழுதுகோல் ,புதையல் மறைக்கும் புன்னகை, எதற்கும் துணிந்து நில்,நல்லதென்று, அன்பின் அடையாளம் எங்கள் மூத்தம்மா, அன்னைக்கு நிகர் யாரோ , கிளியும் லயமும், பென்சிலிடம் பேசும் பிஞ்சு, கடன் கொடுங்கள், அன்னையர் தினத்தில், பூக்கள் பேசிய கதை ,சிறுவர் சித்திரை கொண்டாட்டம் , தனக்குள் திருப்தி படுபவன், குயிலுடன் போட்டி என் மகளுக்கு, போகட்டும் ,பணம் என்ற காகிதத்தால் , பணத்திற்கு எத்தனை பெயர் ,உழைப்பாளர் நன்னாள், மவை பேசும் கதை, எங்கே போகும் தண்ணீர், விடுமுறையேது, ஓடுநீர், உழவர் திருநாள் ,விலையேற்றம் தந்த வாழ்வு, பொங்கட்டும் புது வாழ்வு, தமிழ் குறள் நூறு என 67 கவிதைகள் உள்ளது ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் கற்பனை திறன்,மொழிவாண்மை பரந்த சிந்தனை என அள்ளி தந்துள்ளார் நான் கூறுவதை விட அதை படித்தால் தெரியும் நூலின் பெறுமதி...
நூலாசிரியர்_பற்றி
நூல் ஆசிரியர் கவிஞர் ரவி கிருஷ்ணா அவர்கள் என்னோடு மிகுந்த அன்பு கொண்டவர் ஆசிரியரும் ஆவார் கிரான்குளத்தை சேர்ந்தவர் அத்தோடு நான் உயர்தரம் கற்கும் காலத்தில் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை ஆற்றினார் கவிஞர் ரவிகிருஷ்ணா என்ற பெயரில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் கிருஷ்ணப்பிள்ளை ரவீந்திரன் ஐயா அவர்கள் தமிழ் மீதும் தமிழ் இலக்கியம் மீதும் பற்றும் செயற்பாட்டு ஆர்வம் மிக்க ஒருவர் பாடசாலை காலங்களில் கட்டுரை கவிதை என பல்வேறு தமிழில் நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பாடசாலை படிப்பை நிறைவு செய்ததும் இவரது தமிழ் இலக்கிய செயற்பாடுகள் மேலும்
பல்பரிமாணம் பெற்றன பல்கலைக்கழக காலங்களில் தமிழை ஒரு பாடமாக தெரிவு செய்து தொடர்ந்து தமிழ், தமிழிலக்கியம் செயற்பாடுகளை மேற்கொண்டவர் தமிழில் முதுமாணி பட்டத்தினை மேற்கொண்டு தமது ஆய்வு பொருளாக வட்டார வழக்குகளையும் அதன் இலக்கிய செயற்பாட்டின் இயங்கு நிலைகளையும் ஆய்வு செய்திருந்தார் தொடர் வாசிப்பு இடையறாத தேடலும் இவரது தமிழறிவை குறிப்பாக இலக்கிய ஞானத்தினை ஆழ அகலப்படுத்தி இருக்கின்றன இதனடியாக தமிழ் மரபுகள் வழக்காறுகள் சார்ந்தும் பண்பாட்டு விழிகள் சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகின்றார் தொடர்ந்து பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் முதலியவற்றில் கவிதைகளை எழுதி வரும் இவர் தமது அனுபவங்களின் ஊடாகவே அடுத்த தலைமுறைக்கும் இப்படி இவ்விடயங்களை செயல்முறை ரீதியாக பரிச்சயம் படுத்துகின்றார் அண்மையில் இந்தியாவில் இடம் பெற்ற கவிதை எழுதும் உலக சாதனை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உலக சாதனையில் தனது கவிதையையும் தனது பெயரையும் பதிவு செய்து கொண்டமை இவரது முக்கிய முயற்சிகளுக்கு முத்தாரமாக அமைகிறது இவரது கவிதைகள் புத்தக வடிவிலும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது
பல்கலைக்கழங்களில் பல்வேறு ஆய்வு மாநாடுகளில் கலந்துகொண்டு பல்வேறு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ளார் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றி உள்ளதோடு மட்டக்களப்பு கல்வி வளர்ச்சித் தமிழ் வளவாளராக 2 1/2 வருடங்கள் கடமையற்றுள்ளார் இலக்கிய உலகில் கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் தன்னை அடையாளத்தை பதித்துள்ள கவிஞர் கிளக்கொளி ,வித்துவம், வித்யா, தீபாவளி என போன்ற சஞ்சிகைகளில் கட்டுரைகளையும் எழுதி உள்ளார் ஜனாதிபதி செயலகம் 2019 ஆம் ஆண்டு நடத்திய தேசிய கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு தமிழ் மொழி பிரிவில் முதலாம் இடம் பெற்றதோடு ஐம்பதாயிரம் பணப்பரிசை பெற்றமையும் சிறப்பானதாகும் மேலும் தமிழில் முதுகலைமானி கற்றுத் தேர்ந்தவர் பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமாவில் திறமை சித்தி பெற்றதோடு கல்வி முதுமாணிப் பட்டத்தினையும் பெற்று இருக்கின்றார் இவர் ஆசிரியர் சேவையில் 16 வருட அனுபவத்தை கொண்டவர் அத்துடன் கல்வியில் வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் இலக்கிய வரலாறு எனும் நூல்களை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த வாசகர்கள் பயன்பெற பங்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் கவிதை புலத்திலும் புதுக்கவிதை ,ஹைக்கூ ,பக்தி பாடல் உருவாக்கம் ,சிறுவர் பாடல்கள், என பல வகை முயற்சியில் முனைப்புடன் எழுதி வருகின்றார் இவ்வாறு ஆசிரியர் ரவீந்திரன் ஐயாவை பற்றி சொல்லிகொண்டே போகலாம் இவர் பற்றிய
தகவல்கள் நான் அறிந்ததும் நூலில் இருந்து பெற்றவையும்
புகைப்படம் அலைபேசியில் எடுக்காத காரணத்தினால் இப் புகைப்படங்களை Battimedia.lk உரிமையாளர் எம்.கே. சிவா அண்ணா தந்து உதவினார் அவர் வீட்டில் சிறு நேரம் இருந்து தேனீர் அருந்தி பின்னர் எனது வீட்டுக்கு வந்தடைந்தேன்
விழாவிற்கு என்னையும் அழைத்த நூலாசிரியர் கவிஞர் ரவிகிருஷ்ணா ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் இன்பராசா ஐயா அவர்களும் மற்றும் மோகனதாசன் ஐயா, கமலதாசன் ஐயா அவர்களுக்கும் கதிரவன் கலைக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் அன்பும் ❤️🙏❤️
சிலப்பதிகாரக் கலைச்சுடர்
தேவ சுகிர்தராஜ்


