50 ஆண்டுகள் 50 நிகழ்வுகள் திட்டத்தில் அரையாண்டிலே ஐம்பதாவது நிகழ்வை தொட இருக்கும் கதிரவன் கலைக் கழகம்
********************************************
கதிரவன் கலைக் கழகம், "ஊர் இருந்து உலகம் வரை" பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. 2026 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டாக "50 ஆண்டுகள் 50 நிகழ்வுகள்" என்று திட்டமிட்டு பல்வேறு கலை இலக்கிய சமூக அமைப்புகளுடன் இணைந்து பல நிகழ்வுகளை, விழாக்களை இதுவரை நிகழ்த்தி இருக்கின்றது.
இவ்வருடம் (2026) தை மாதம் தொடக்கம் இன்று வரை -அரையாண்டு முடிவதற்குள் கல்வி அபிவிருத்தி திட்டம், இந்தியா தமிழ்நாட்டுப் பயண பட்டிமன்றங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள், 25 விழிப் புணர்வு வீதி நாடகங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், ஔவை விழா போட்டி நிகழ்வுகள், பிரமாண்டமான கம்பன் விழா, தமிழ்நாட்டு பட்டிமன்றப் பேச்சாளர் கலையமுதன் பங்கு பற்றிய 6 பட்டிமன்றங்கள், பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் என்று(50)ஐம்பது நிகழ்வுகளை எட்டும் வரைக்கும் பயணித்துள்ளோம்.
இந்தப் பின்புலத்தில் எதிர்வரும் பத்தாம் திகதி அன்னையர் தினத்தினை (10.05.226) சிறப்பிக்கும் முகமாக "அம்மாவை வணங்குவோம்" எனும் கருப்பொருளில் பிரமாண்டமான அன்னையர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம் அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் இந்நிகழ்வோடு இணைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கதிரவன் த.இன்பராசா
தலைவர்
கதிரவன் கலைக் கழகம்
