கருங்கல் சிலையில் கம்பீரச் சொத்தவர்.
காலம் போற்றும் முத்தமிழ் வித்தகர்
அரும்பெரும் பொக்கிஷம் அகிலம் எங்கும்
அவரால் எங்கள் பெருமை பொங்கும்.
கல்லடிப் பாலத்தைக் கடக்கும் போதிலே
கலை பண்பாடு இலக்கியம் காதிலே
சொல்லடியாகக் கேட்கும் மீனிசை......
சிறப்புத் தந்தவர் அதையே நீ இசை.
விழுந்த காலத்தில் எழுந்து நின்றவர்
வித்தக நாட்டிற்கு விவேகம் தந்தவர்
பழுத்த முதுசொம் பாரெங்கும் சிறக்க
பார்த்தாலே எங்கள் அறிவுக்கண் திறக்க
நூற்றாண்டு சபையோடு செல்வத் தலை
நுணுக்கமாய்ச் சிந்தித்த விபுலச் சிலை
ஊற்றெடுக்கும் உலக அறிவுக்கு வழி...
உருவாக வேண்டும் நாம் அவரின் வழி.
நூற்று முப்பத்து நான்கு ஆண்டு...
நூறாயிரம் கடந்தும் போகாது மாண்டு
ஏற்றி இதயத்தில் இருத்துவோம் இன்று
ஏற்றம் உருவாகுமே வாழ்விலே நன்று.
கதிரவன் த.இன்பராசா
03.05.2026

