சாகாத தேனிசையின் சாதனையைத் தேடுவோம்

சிலர் சாவதில்லை ; சாகாமல் இருக்க வாழுங்கள்.....




தேசத்தின் பாடல்களை

தேகத்திற்கு நினைவூட்டி

ரோசத்தை மீண்டும் தந்த

ராசா நீ சாகவில்லை.....


தேனிசை செத்தாரென்று

தேவையற்ற செய்தி போடும்

மீனிசை மாந்தர்களே....!

மீண்டும் அவர் பிறந்திருக்கார்.


ஈழத்தின் உறவுகளை......

இதயத்தால் வென்றவர்க்கு

காலத்தால் அழிவுண்டா.....?

காலனுக்கும் துணிவுண்டா.....?


செல்லுமிடம் எங்கிலுமே.....

செல்லப்பா எனும் பெயர்

சொல்லுகின்ற அவருக்கு..

சா என்ற ஒன்றுண்டா....?


பாடியதை கேட்டுப் பாரு

பாரிலே ஓர் தேசம்

நாடியதை நினைவூட்டும்

நல்வழி அது காட்டும்.


****************************

கதிரவன் த.இன்பராசா

28.04.2026