ஐம்பதாவது ஆண்டில் ஓர்
அரங்கேற்றம் : 30.05.2026
கதிரவன் கலைக் கழகத்தின் முதலாவது களம் 1976 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அயம்மன் ஆலய முற்றம்.
28.04.1976 ஆம் ஆண்டு கண்ணகை அம்மன் முற்றத்தில் இருக்கின்ற பூமா மரத்தடியில் ஒன்று கூடிய இளைஞர்கள் கலாபூசணம் சி.தங்கராசா தலைமையில் உருவாக்கியதே கதிரவன் கலைக்கழகம்
76 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் உழவு இயந்திரப் பெட்டியில் மேடை அமைத்து
அரங்கேறிய முதலாவது நாடகம் போடியார் வீட்டுக் கல்யாணம், சதிகாரத் தம்பியால் அலைந்த உறவு
ஆரம்பிக்கப் பெற்ற காலம் தொட்டு இன்று வரைக்கும் 50 ஆண்டுகள் கண்ணகை அம்மன் அரங்கிலே நாடகம், கூத்து, கரகம், வில்லுப்பாட்டு, தாளலயம், பட்டிமன்றம் என்று ஏதாவது ஒன்று அரங்கேற்றம் கண்டுள்ளது.
பொல்லாத பணம், இணைந்த பாசம், சிங்கார வேலவன், பாஞ்சாலி சபதம், மங்கையில் மயங்கிய மன்னன், உண்மையே உயர்த்தும் ஏணி, விதி செய்த சதி, இராவணன், பிரம்படி பெற்ற பெருமாள் முதலான சமூக, புராண நாடகங்களையும்
மயில் ராவணன் சண்டை ,உருத்திரசேனன் சண்டை, சராசந்தன் சமர், அள்ளி திருமணம், ஆரவல்லி சமர், சிங்கார வேலவன், பாண்டவர் வனவாசம், கண்ணகி சிலம்பு, அலங்கார ரூபன், லவகுயன்,வள்ளி திருமணம், தருமபுத்திரர், பாண்டவர் வைகுண்டம், பகாசூரன் சண்டை, பாரதப் போர், மதுரவாசகன், சத்தியவான் சாவித்திரி முதலான கரகங்களையும்
ஆரம்ப காலம் தொட்டு அரங்கேற்றம் செய்து வந்த கதிரவன் கலைக் கழகம் இன்றும் கலை-இலக்கிய-பண்பாடு மற்றும் சமூக சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை ஊர் இருந்து உலகம் வரை அறிந்த விடயம்.
ஆரம்பிக்கப் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வீதி நாடகம், பட்டிமன்றம், கவியரங்கம், சஞ்சிகை வெளியீடு, கலை நிகழ்வுகள், சமூகச் செயற்பாடுகள் என்று கதிரவன் கலைக் கழகத்தின் செயற்பாடு பல பரிமாணங்களை பெற்று முன்னோக்கி நகர்கின்றது.
இந்தப் பின்புலத்தில் இவ்வருடம் 2026 ஆம் ஆண்டு 50 ஆவது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் கதிரவன் கலைக் கழகம்
ஆரம்ப காலம் தொட்டு வந்த பாரம்பரியத் தைக் கடைப்பிடித்து புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் திருச்சடங்கில் #கரக #நடனம் அரங்கேற்றம் செய்ய உள்ளது.
சுபத்திரை கல்யாணம் எனும் கரக நடனம் திருக்குளுர்த்தில் பெத்தான்குடி மக்களின் திருச்சடங்கில் 30.05.2026 சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அரங்கேற்றம் காண உள்ளது.
இவ் அரங்கேற்று விழாவிற்கு கதிரவன் உறவுகள் அனைவரையும், கிராமியக் கலையின் பால் பற்று கொண்ட அன்பர்களையும், பொதுமக்கள் எல்லோரையும் வருக வருக என்று இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.
கதிரவன் த.இன்பராசா
