சின்னம் அணிவித்து சிறந்த விழிப்புணர்வை வழங்கிய பாடசாலைத் தினம்

151 ஆவது ஆண்டில் சின்னம் சூட்டலும் கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வும்....


மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் 151ஆவது ஆண்டு பாடசாலை தின நிகழ்வு  இன்று 14.05.2026 (வியாழக் கிழமை) காலை ஒன்று கூடலில் வித்தியாலய அதிபர் அ. குலேந்திரராஜா தலைமையில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் பங்குபற்றலுடன்  பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றுபட மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.


























பாடசாலை அதிபரின் சிறப்பு உரையுடன், பாடசாலையின் வரலாறு மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு பிரதான நிகழ்வான பாடசாலை சின்னம் சூட்டும் நிகழ்வுஇடம் பெற்றது.

தொடர்ந்து மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்குடன் நாடகமும் அரங்கியலும் ஆசிரியரின் நெறியாள்கை யில் விழிப்புணர்வு நாடகமொன்றும் மாணவர்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது