பொன்விழா - 2026 மிக விரைவில்....
பொன்விழா ஆண்டில் பல
புகழோங்கும் நிகழ்வு தந்து
தன்விழாக் காண ஒரு
தனிப்படை அமைத்துக் கொண்டு
இன்பமாம் அந்த நாளும்
இனித்திடக் காத்திருக்கோம்.
புதியவை புகுந்து நல்ல
பழையவை மிகுந்து வல்ல
மதிப்புடன் பணிகள் செல்லும்
மகிமைகள் பலதை அள்ளும்
#கதிரவன் #விருது ஒன்றும்....
கைகளில் வந்து வெல்லும்.
தொடக்கம் முதல் முடிவுவரை
தோன்றிய அனைத்தையுமே
அடக்கிடும் #கதிரவனின்...
#ஆவணச் #சிறப்பிதழும்
இடத்தினைப் பிடிக்கும் இந்த
இன்தமிழ் பொன் விழாவில்...
ஈழத்தின் இதயம் காக்க...
இயங்கிட உறுதி கொண்ட
காலத்தில் கதிரவனும்...
கலையோடு பயணம் செய்து
பாலத்தில் இணையும் ஆண்டு
பொன்விழாக் காணும் நன்று.
கதிரவன் த.இன்பராசா
04.07.2026
