மீன் பாடும் தேனாடு மட்டு மண்ணில் கம்பன் புகழ் பாடும் கதிரவன்

மீன்பாடும் தேனாடு மட்டு மண்ணில் கம்பன் புகழ் பாடும் கதிரவன்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் புகழ் பாடும் கதிரவன் நிகழ்வின் ஊடாக  மகத்தான இலக்கியப் படைப்பான கம்பராமாயணம் மற்றும் தமிழ்மொழியின் செம்மையை உலகிற்கு எடுத்துரைக்கமுடிகிறது.

தேன் சிச்தும் கம்பன் விழா வருடா வருடம் இலங்கையில் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. அமுழ்திலுமினிய முத்தமிழையும் வெளிப்படுத்தும் விழாவாக ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் பல அரங்குகள் வடிவமைக்கப்பட்டு கம்பன் விழா நடைபெறுவதை நாம் அவதானித்திருக் கின்றோம்

கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வில் பல நிகழ்வுகளை ஊர் இருந்து உலகம் வரை எனும் கருப்பொருளின் கீழ் நிகழ்த்தி வருகின்றோம்.

அதில் ஓர் அங்கமாக இந்தியா போபால் கம்பன் கழகத்தோடு இணைந்து மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் 29.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மாலை வரை இரண்டு அமர்வுகளாக கம்பன் விழா நடைபெற உள்ளது.








 

கம்பன் விழாவின் முக்கிய நோக்கங்கள்

தமிழின் பெருமை, பாரம்பரியம், செம்மொழி மரபை பரப்புதல், ஊக்கப்படுத்தல்

கம்பர் அவர்களின் இலக்கியச் செல்வத்தை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துதல்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் தமிழ் பற்றினையும், ஆர்வத்தினையும் வளர்த்தல்.

இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பண்பாட்டு மேடையை உருவாக்குதல்

மொத்தத்தில், கம்பன் விழா என்பது தமிழ் மொழியின் பெருமையை கொண்டாடவும், அதன் இலக்கிய பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் நடத்தப்படும் ஒரு முக்கியமான பண்பாட்டு விழாவாகும்.

கதிரவன் த.இன்பராசா
தலைவர்,கதிரவன் கலைக் கழகம்