இந்தியா - தமிழ்நாடு பட்டிமன்ற நடுவர் முனைவர், வழக்கறிஞர் கலையமுதன் தலைமையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் பட்டிமன்றம்
18.01.2015 இல் தோற்றம் பெற்ற கதிரவன் பட்டிமன்றப் பேரவை அதன் தாய்க் கழகமான கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிறைவொட்டி பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகளை "ஊர் இருந்து உலகம் வரை" என்னும் கருப்பொருளில் நிகழ்த்தி வருகின்றது. அதில் ஓர் அங்கமாக பட்டிமன்றப் பெருவிழா மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
பாடசாலைகளில் செயலூக்கப் பட்டிமன்ற மாகவும், பிரதேச செயலகம் மற்றும் உதவும் கரங்கள் இல்லத்தில் சர்வதேச மகளிர் தின பட்டிமன்றமாகவும் நடைபெற்ற இப்ப பட்டிமன்றத்தில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் அனைத்துப் பேச்சாளர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க தாகும்.
சோலையூரான் ஆ.தனுஸ்கரன்
உபதலைவர், கதிரவன் பட்டிமன்றப் பேரவை





