"மனிதக் கணிப்பான்" விருதும் பாராட்டும் பெறும் மட்டக்களப்பின் குட்டிக் கணித மேதை 7 வயது காவியசிறி
கம்பன் விழாவில் மனிதக் கணிப்பான் (Human Calculator) விருது பெறும் 7 வயதுச் சிறுமி
கணித மேதை காவியஸ்ரீ சுப்பிரமணியம்
Sri Lanka's Got Talent - Season 3 இல் 7 வயதுச் சிறுமி காவியசிறி சிறந்த மனக் கணித ஆற்றலை வெளிப்படுத்தி மட்டக்களப்புத் தேர்வுகள், தேசிய மட்ட நடுவர் தேர்வுகள், Cull Round, Quarter Finals மற்றும் Semi Finals ஆகியவற்றை வென்று பொதுமக்களின் வாக்குகள் மூலம் Pre-Finals நிலைக்கு முன்னேறிய சாதனையைப் பாராட்டிக் கௌரவித்து
கதிரவன் கலைக் கழகம் (இலங்கை), போபால் கம்பன் கழகம் (இந்தியா) இணைந்து நடத்தும் கம்பன் விழா-2026 இல் இவ் விருது வழங்கப்பெறவுள்ளது.
எதிர்வரும் 29.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலை அரங்கில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் அயோத்தி அரங்கில் காவியசிறிக்கு இவ்விருது வழங்கப்படுவதோடு அவர் தனது மனக்கணித ஆற்றலையும் வெளிப்படுத்தவுள்ளார்.
இவ்விருதினை இந்தியா - போபால் கம்பன் கழகம், இலங்கை - கதிரவன் கலைக் கழகம் இணைந்து வழங்குகின்றமை விசேட அம்சமாகும்.
புதுவையூர் பு.தியாகதாஸ் , செயலாளர்,
கதிரவன் கலைக் கழகம்
