இந்தியா - போபால் கம்பன் கழகம் ; இலங்கை - கதிரவன் கலைக் கழகம் இணைந்து மட்டக்களப்பில் கம்பன் விழா

போபால் கம்பன் கழக செயலாளர் பா.குமார்

இந்தியா போபால் கம்பன் கழகமும் கதிரவன் கலைக் கழகமும் இணைந்து மட்/மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்யாலயம் மட்டக்களப்பில் வருகின்ற.ஞாயிற்றுக்கிழமை 29.03.2026 காலை 9மணி முதல் இரவு 6 மணிவரை  இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் ஆசியுடன் கம்பன் விழா இரு அமர்வுகளாக நடக்க. உள்ளது. இதில் முக்கியமாக சிறப்பு கம்பன் பட்டிமன்றம் தலைப்பு. கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவா? நட்பா? நடுவராக கதிரவன் த.இன்பராசா மற்றும் கதிரவன் கலைக் கழகத்தினர் பங்கேற்கும் சிறப்பான நிகழ்வும் மற்றும் இவர்களுடன் பிரபலமான தமிழ் சான்றோர்களும் ஆன்றோர்களும் மட்டக்களப்பு மற்றும் இலங்கை பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கெளரவ விருந்தினர்களும் இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்தும்  வந்து சிறப்பிக்க உள்ளார்கள்.  இந்நிகழ்ச்சியை போபால் கம்பன் கழகம் தலைவர் முனைவர் கா.பா.செளந்தர் ராஜன் மற்றும்  அதன் செயலாளர் பா.குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். கதிரவன் த. இன்பராசா அவர்கள் மற்றும் கதிரவன் உறவுகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஓருங்கிணைந்து நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கம்பன் புகழ் பாட அனைவரும் வேண்டுகிறோம்.

திரு பா.குமார் , செயலாளர்

போபால் கம்பன் கழகம்