ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவன கிளைத் திறப்பு விழாவும், தையல் பயிற்சி நிலைய ஆரம்ப நிகழ்வும்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனம் இலங்கையில் பல்வேறு பாகங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறுபட்ட சமூக முன்னேற்ற பணிகளை செய்து வருகின்றது.
தேவை உடையோருக்கு வீடமைப்புத் திட்டம்
வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம், கல்வி அபிவிருத்திச் செயற்பாடு, மாற்றுத்திற னாளிகள் முன்னேற்றத் திட்டம் என்று பல்வேறு செயற்பாடுகளை மனிதாபிமான அடிப்படையில் நடைமுறைப்படுத்துகிறது.
அதில் ஓர் அங்கமாக எமது மக்கள் நன்மை அடையக்கூடிய வகையில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அதன் கிளை அலுவலகம்
23.02.2026 (திங்கட்கிழமை) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் தையல் பயிற்சி நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது.
இலவசமாக நடைபெறவுள்ள இத் தையல் பயிற்சி நிலையத்தில் இணைந்து பயன்
பெற நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தினை
கதிரவன் கலைக் கழகம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.
#கதிரவன்











