பிரமாண்டமாக நடைபெற்ற ஔவை விழா விவாத போட்டி
வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்தும் ஔவை விழா- 2026 நிகழ்வையொட்டி பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டி 14.02.2026 ஆம் திகதி (சனிக்கிழமை) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம் பெற்றது.
அதிகளவான பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்விற்கு ஔவை விழா அனுசரணையாளர்களான வேல்முருகன் சகோதரர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர், நடுவர்கள், கதிரவன் பட்டிமன்றப் பேரவையினர், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
கவிஞர் அழகு தனு
செயலாளர்
கதிரவன் பட்டிமன்றப் பேரவை


































