மூத்த, ஆளுமை உள்ள அன்னையர் பெயரை முன்மொழியுங்கள்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கின்ற அன்பு உறவுகளே வணக்கம்.....!

எதிர்வரும் 10.05.2026 அன்னையர் தினத்தினை முன்னிட்டு #கதிரவன் கலைக் கழகம் ; Battimedia.lk  இணைந்து....

அம்மாவை வணங்குவோம்

அன்னையர் தின சிறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்நிகழ்வானது 10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 3.00 மணிக்கு கல்லடி துளசி மண்டபத்தில் கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில்  பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  

இந்நிகழ்வில்....

மட்டக்களப்பு மண்ணின் மூத்த, ஆளுமை அன்னையர்க்கு கௌரவம் வழங்கவுள்ளோம்.

இத்தகவலைப் பார்வையிடுகின்ற அன்பு உள்ளங்கள் ஏனையோருக்கும் பகிர்ந்து, தாங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங் கண்டுள்ள மூத்த, ஆளுமை உள்ள அன்னையர்களை எமக்கு முன்மொழியுங்கள்.  

முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை

0752508041 

எனும் இலக்கத்திற்கு 

07.05.2026 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்

கலை - இலக்கியம்- பண்பாடு - சமூகம் - கல்வி - விளையாட்டு - ஆன்மீகம் - வீரம் - சுயதொழில் -  மருத்துவம் - சோதிடம் - ஊடகம் முதலான எத்துறை சார்ந்தும் உங்கள் முன்மொழிவு அமையலாம்.

இத்துறைகளில் மூத்த அன்னையர் தொடக்கம் எங்கள் தெரிவு இடம்பெறும்.

ஆகவே ஒத்துழையுங்கள். எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

********************************************

கதிரவன் கலைக் கழகம் & 

Battimedia.lk

********************************************

கதிரவன் த.இன்பராசா 0759175981