கம்பன் விழாவை வாழ்த்தும் லலித்குமார்




மட்டக்களப்பில் நடைபெற்ற கம்பன் விழா – 2026 உண்மையிலேயே தமிழ்ப் பண்பாட்டு உலகிற்கு பெருமை சேர்த்த ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”  

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப 

ஒரு நிகழ்வைச் சிறப்பாக நடாத்த, சரியான பொறுப்புகளை சரியானவர்களுக்கு வழங்குவது மிக முக்கியம் என்பதை மட்டக்களப்பின் கதிரவன் கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

அவ்வகையில் கதிரவன் கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 

“ஊர் இருந்து உலகம் வரை” என்ற உயர்ந்த கருப்பொருளில் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பது, கதிரவன் கலைக்கழகத்தின் தொலைநோக்கு சிந்தனையையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. 

அவற்றில் ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த கம்பன் விழா, இலக்கியமும் கலாசாரமும் இணைந்த ஒரு களமாக திகழ்ந்தது.

இந்தியா – போபால் கம்பன் கழகம் மற்றும் இலங்கை கதிரவன் கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை நடத்தி இருப்பது  கலைஇலக்கிய வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்நகர்வாய் அமைகிறது.

“அயோத்தி அரங்கு” என ஆரம்ப நிகழ்வு அமைக்கப்பட்டமை, கம்பன் அவர்களின் இலக்கிய உலகை நேரடியாக அனுபவிக்கச் செய்தது போல ஒரு ஆன்மிக மற்றும் கலைநயமிக்க சூழலை உருவாக்கியது.

இவ்விழா, கம்பராமாயணத்தின் இலக்கியச் செழுமையை மட்டும் அல்லாது தமிழின் பாரம்பரியம், பண்பாடு, மற்றும் கலை வெளிப்பாடுகளை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவும் இருந்தது. நிகழ்வின் ஒழுங்குமுறை, அரங்கேற்றங்கள், மற்றும் பங்கேற்பாளர்களின் உற்சாகம் ஆகியவை விழாவை மேலும் சிறப்பித்தன.

அவ்வகையில் நடைபெற்று முடிந்த கம்பன் விழா தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதோடு 

தமிழர் இலக்கியத்தின் மகத்துவத்தை மீண்டும் நினைவூட்டி தமிழர்களை ஒரே மேடையில் இணைத்தது எனலாம். 





மட்டக்களப்பின் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக இடையறாது  உழைத்து வரும் கதிரவன் த.இன்பராசா அவர்களின் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கதிரவன் கலைக்கழகம் மூலம் செயற்திறன்மிக்க அங்கத்தவர்களை ஒன்றிணைத்து கலைஇலக்கிய செயற்பாட்டினூடாக உருவாக்கி வரும் விழிப்புணர்வு, இளம் தலைமுறையின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு நம் சமூகத்திற்கு ஒரு பெரிய பலமாக திகழ்கிறது.

அவ்வகையில் இவ்விழா வெற்றிகரமாக நடைபெற உழைத்த அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கதிரவன் கலைக்கழகத்தினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு நன்றிகளும் உரித்தாகும்.

“ஊரிருந்து உலகம் வரை” என்ற உயர்ந்த பார்வையுடன் நீங்கள் முன்னெடுத்து வரும் பணிகள் மேலும் மேலும் வளர்ந்து, பல சாதனைகள் படைக்க இறைவன் அருள் புரிவானாக. உங்கள் வழிகாட்டுதலின் கீழ் கதிரவன் கலைக்கழகம் இன்னும் பல உயரங்களை எட்டிட என் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

ர.லலித்குமார் MJF /MAF

தலைவர் 24/25

மட்டக்களப்பு புதியநூற்றாண்டு MJF லயன்ஸ் கழகம் .