அதனைத்தொடர்ந்து வ.அ.இராசரத்தினம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கணக்காய்வாளர் திரு.இரா.புவிராசசிங்கம் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து கலாநிதி வசந்தி நேரு அவர்களின் நெறியாள்கையில் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக தலைமையுரையானது , மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அடுத்து நூல் வெளியீட்டுரை அருட்பணி அ.அ.நவரெத்தினம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் நூல் வெளியீடு இடம்பெற்றது. அடுத்து “இற்றைத்திங்கள் இவ் வெண்நிலவில்” சிறுகதை தொகுப்பு நூல் மதிப்பீட்டுரை விமர்சகரும் எழுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான திருமதி.றூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களாலும்
“வ.அ.இராசரத்தினக்காவியம்” நூல் நயவுரை எழுத்தாளரும் இலக்கிய , சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான ஜனாப் றியாஸ் அகமட் அவர்களாலும் தேடல்கள் கவிதை தொகுப்பு நூலிற்கான நயவுரை கவிஞரும் விவாதக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான வைத்தியர் திருமிகு இரா.முரளீஸ்வரன் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.அதன் பின்னர் நிகழ்விற்கான அழைப்பு அதிதிகளின் உரை இடம்பெற்றது. அதனையடுத்து ஏற்புரையும் நன்றியுரையும் திருமதி.அன்ரனி வசந்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது இதன் போது அவர், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்வினை மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமிகு அ.ஜெகநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.நிகழ்வுகள் யாவும் மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
பிரதீஷ்காந்















